Skip to main content

NMMS,TRUST.NTSE போட்டித் தேர்வுகளை அறிந்து கொள்வோம்

மாணவ மாணவிகளுக்கும் பெற்றோர்களுக்கும் வணக்கம்....

இன்று நாம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கக்கூடிய வகையில் அரசால் நடத்தப்படக் கூடிய போட்டித்தேர்வுகள் எவை எனவும் அதற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் எவை எனவும் அந்தப் போட்டித் தேர்வில் வெற்றி பெற்றால் கிடைக்கக்கூடிய கல்வி தொகை எவ்வளவு அந்த போட்டித்தேர்வுகள் எந்தெந்த வகுப்பிலேயே எப்போது நடத்தப்படுகின்றன போன்ற விபரங்களை பற்றி இந்த கட்டுரையில் நாம் காண இருக்கிறோம்

பொதுவாகப் போட்டித்தேர்வுகள் என்பவை மாணவர்களுடைய பாட அறிவையும் மன திறனையும் சிக்கல்களுக்கு தீர்வு காணுதல் போன்ற திறன்களை சோதிக்கும் வகையில் அமைக்கப்படுகின்றன

எட்டாம் வகுப்பிலேயே பயிலும் மாணவர் தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வு என படக்கூடிய என் எம் எம் எஸ் என சுருக்கமாக அழைக்கப்படும் கூடிய இந்த தேர்வானது ஏழு மற்றும் எட்டாம் வகுப்பில் பயின்ற பாடங்களிலிருந்து அறிவியல் சமூக அறிவியல் கணிதம் ஆகிய பாடங்களில் மாணவர்கள் கற்ற தகவல்களை புரிந்துள்ளனர் அதனை பயன்படுத்தும் வகையில் தங்கள் அறிவை மேம்படுத்தி உள்ளனரா என்பதை சோதிக்கும் வகையில் ஏவினார்கள் நேரடி வினாக்கள் ஆகும் பாடப்பகுதி என்னுடைய உட்புறத்தில் இருந்தோம் மேலும் அறிந்து கொள்வோம் மற்றும் தகவல்துறை போன்ற விவரங்களில் இருந்தும் கேட்கப்படுகிறது இதை நாம் படிப்பு அறிவு தேர்வு என்று சொல்லலாம் இதில் 90 மதிப்பெண்களுக்கான வினாக்கள் கேட்கப்படுகிறது இதில் 90 நிமிடங்கள் வழங்கப்படுகிறது எனவே ஒரு நிமிடத்திற்கு ஒரு வினா வீதம் மாணவர்கள் விடையளிக்க வேண்டிய பயிற்சி மேற்கொள்வது மிகவும் அவசியமானதாகும் இதில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாட பகுதிகளில் நேரடி வினாக்களுக்கு குறைந்த கால அளவை எடுத்துக்கொண்டு விடையளித்து உண்மையானால் கணிதம் மற்றும் அறிவியலில் உள்ள கணக்கீட்டு வினாக்களுக்கு சற்று அதிக நேரத்தை எடுத்துக் கொண்டு கால மேலாண்மையை நாம் எளிமையாக பின்பற்றி விடலாம் . 

மன திறன் தேர்வு இந்த தேர்வானது 90 வினாக்கள் 90 நிமிடங்கள் என நடத்தப்படுகிறது இதில் மாணவர்களுடைய சிந்திக்கும் ஆற்றலை சோதிக்க வகையிலும் படைப்பாற்றல் திறனை வளர்க்கும் வகையிலும் சிக்கலுக்கு தீர்வு காணுதல் திறனை சோதிக்கும் வகையிலும் புதிர்கள் சிந்தனை கணக்குகள் சூழ்நிலை கணக்குகள் நுண்ணறிவை பயன்படுத்தக் கூடிய வகையிலான கணக்குகள் பல்வேறு தலைப்புகளில் கேட்கப்படுகின்றன இந்தத் தேர்வு பகுதியை சிறப்பாக மாணவர்கள் செய்வதற்கு குறைந்தபட்சம் ஆறாம் வகுப்பில் இருந்தே இந்த தலைப்புகளை குறித்து தொடர் பயிற்சியை மேற்கொள்ளும் போது விரைவாகவும் சரியாகவும் விடை அளிக்க முடிகிறது இந்த தேர்வில் எழுதும் பொழுது மாணவர்கள் முதலில் நன்கு தெரிந்த மற்றும் எளிய வினாக்களை விடை அளித்து விட்டு பின்னர் சிந்தித்து விடை அளிக்கும் வகையிலும் சில கணக்கீடுகளை செய்து விடை அளிக்கும் வகையிலும் உள்ள வினாக்களை திட்டமிட்டு விடையளித்தார் சரியான கால அளவிலேயே முழுமையாக இந்த தேர்வினை நிறைவு செய்ய இயலும்

இந்த வகையில் எட்டாம் வகுப்பில் நடத்தக்கூடிய தேர்விற்கு விண்ணப்பிக்க ஒரு மாணவர் ஏழாம் வகுப்பிலேயே ஐம்பதிலிருந்து அறுபது சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருத்தல் வேண்டும் மேலும் அவர்களது பெற்றோர் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கு இருத்தல் வேண்டும் ஒவ்வொரு ஆண்டும் இதற்கான அறிவிப்பு அரசால் வெளியிடப்படும் தாங்கள் பயிலும் பள்ளியில் முழுமையான விபரங்களை சமர்ப்பித்தால் தலைமை ஆசிரியர் உதவியுடன் அது இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு மாணவர்களுக்கு தேர்வுக்கான அடையாள அட்டை இணையம் வாயிலாகவே வெளியிடப்படும் அதனை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து குறிப்பிட்ட காலத்தில் தேர்வுகளை நிறைவு செய்தல் வேண்டும் இந்த தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி 11 30 வரை நடைபெறும் பிறகு பதினைந்து நிமிட கால இடைவெளிக்குப் பிறகு 12 மணிக்கு தொடங்கி 1 30 வரை இந்த தேர்வானது நடைபெறும்

இந்தத் இந்த தேர்வு எழுதிய மாணவர்களின் மதிப்பெண்கள் ஆனது பட்டியலிடப்பட்டு இன வாரியான ஒதுக்கீட்டின் அடிப்படையில் முதல் மதிப்பெண்களைப் பெற்ற ஒவ்வொரு பிரிவில் இருந்தும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள் ஆண்டுதோறும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பில் இருந்து மாதம்தோறும் ரூபாய் 1000 வீதம் 12ஆம் வகுப்பு முடிக்கும் வரை மொத்தமாக நான்கு ஆண்டுகளில் 48 ஆயிரம் ரூபாய் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது எனவே எட்டாம் வகுப்பு பயில கூடிய மாணவர்கள் இந்தத் தேர்வை தவறாமல் பங்கெடுத்துக் கொண்டார் இது அவர்களுடைய கல்வி பொருட்களை வாங்குவதற்கும் கல்வி தொடர்பான மேற்படிப்பு செலவுகளை மேற்கொள்வதற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்


ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு தேர்வு என படக்கூடிய டிரஸ்ட் என்ற அழைக்கப்படக்கூடிய தேர்வானது கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசால் நடத்தப்படுகிறது இதில் 150 வினாக்கள் கொண்ட வினாத்தாள் வழங்கப்படும் இதில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் அவர்கள் கண்டிப்பாக கிராமப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் மேலும் பெற்றோரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும் இதற்கு வட்டாட்சியரிடம் இருந்து வருமான சான்றிதழ் வாங்கி இணைத்து விண்ணப்பித்தல் அவசியமாகும் மேலும் இந்தத் தேர்விலும் பாட அறிவு மற்றும் மனத்திறன் தேர்வுகளை சோதிக்கும் வகையில் வினாக்கள் அமைக்கப்படும் இந்த வினாக்கள் மிகவும் எளிமையான வகையில் ஏயும் எட்டாம் வகுப்பில் நடத்தப்பட்ட எம்எம்எஸ் தேர்வினை ஒப்பிடும்பொழுது அதைவிட மிக எளிமையாகவும் அமையும் என்பதை குறிப்பிடத்தக்கது மேலும் இந்த தேர்வில் ஒரே வினாத்தாளில் படிப்பறிவு திறன் தேர்வு மற்றும் மன திறன் தேர்வுக்கான வினாத்தாள் எங்கே இணைந்து அமைக்கப்படும்

இந்தத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஆண்டிற்கு ரூபாய் 1000 வீதம் 12 ஆம் வகுப்பு வரை வழங்கப்படும்


பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு என் டி எஸ் சி என்ற பெயரில் நடத்தப்படுகிறது இந்த தேர்வானது 2 கட்டங்களைக் கொண்டது இதன் முதல் கட்ட தேர்வு அந்தந்த மாநில அரசால் நடத்தப்படுகிறது அதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களை கொண்டு மத்திய அரசால் நாடு முழுவதும் இரண்டாம் கட்ட தேர்வு நடத்தப்படுகிறது இந்தத் தேர்வானது பத்தாம் வகுப்பு பயில கூடிய மாணவர்கள் படிப்பறிவு மற்றும் மன திறன் தேர்வு சோதிக்கும் வகையில் அமைக்கப்படுகிறது இதில் வினாக்கள் பெரும்பாலும் 8 9 10 வகுப்புகளில் மாணவர்கள் பயின்ற அறிவியல் சமூக அறிவியல் கணிதம் ஆகிய பகுதிகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படும் இதில் 100 வினாக்கள் படிப்பறிவு திறன் தேர்வில் கேட்கப்படும் இதற்கான கால அவகாசம் ஆக 120 நிமிடங்கள் வழங்கப்படும் இதில் முதல் கட்ட தேர்வில் வினாக்கள் சற்று எளிமையாக இருக்கும் ஆனால் இரண்டாம் கட்ட தேர்வில் சற்று சிந்தித்து விடை அளிக்கும் வகையில் உயர் திறன் வினாக்கள் அதிகமாக இடம்பெறும் எனவே மாணவர்கள் எட்டாம் வகுப்பு பயிலும் பொழுதில் இருந்தே இதற்காக குறிப்புகளை எடுத்துக் கொண்டு பயிற்சி பெற்றார் கண்டிப்பாக இந்தத் தேர்வில் வெற்றி பெற இயலும் மேலும் இதில் மனத்திறன் தேர்வுக்கான பகுதி தனியாக நடத்தப்படுகிறது அதுவும் 100 மதிப்பெண்கள் 120 இடங்களில் தேர்வு எழுதும் வகையில் வினாத்தாள் வழங்கப்படுகிறது இந்த மனத்திறன் தேர்வுக்கான பகுதியானது எட்டாம் வகுப்பு என் எம் எம் எஸ் தேர்வை விட சற்று கடின தன்மையுடனும் உயர் சிந்தனை வினாக்கள் ஆகவும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது எனவே இதற்காக மாணவர்கள் சற்று சிரத்தை எடுத்து அதிகமான வினாக்களை தலைப்பு வாரியாக பயிற்சி எடுத்தால் மட்டுமே இதில் அதிக மதிப்பெண்களைப் பெற முடியும் ஒவ்வொரு ஆண்டும் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து அந்தந்த மாநிலத்திற்கான தேர்வு செய்யப்படும் மாணவனை மாறுபடும் எனவே மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே இந்த கல்வி உதவித்தொகையை பெற இயலும்

இந்த தேர்வில் முதல் கட்ட தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட தேர்வான பெரும்பாலும் மே மாதத்தில் நடத்தப்படும் இதற்கான பாடப் பகுதிகள் பெரும்பாலும் என்சிஇஆர்டி வழங்கப்படக் கூடிய பாடப் புத்தகங்களில் இருந்து எனவே மாநில பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்கள் கூடுதலாக என்சிஆர்டி பகுதிகளையும் பயிற்சி பெறுவது அவசியமாகும் மேலும் இந்த தேர்வு வினாத்தாள்கள் முதல் கட்டத்தை விட சற்று அதிக கடினத்தன்மை உடனும் பெரும்பாலான வினாக்கள் சிந்தித்து விடை அளிக்கக்கூடிய வகையிலும் அமைக்கப்படும் என்பது படவேண்டும் இவ்வாறு தேர்வில் அதிக மதிப்பெண்களை பெறக்கூடிய மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்பட்ட இதிலும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்

இந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பயிலும்போது ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு மாதமும் ரூபாய் ஆயிரத்து 250 வீதம் கல்வி உதவித்தொகை அவர்களது கணக்கில் வரவு வைக்கப்படும் மேலும் கல்லூரிப் படிப்பை தொடரும் பொழுது மாதம் ரூபாய் 2000 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் முதுகலை படிப்பு தொடரும் பொழுதும் இந்த தொகையானது மாதம் 2,000 ரூபாய் என கணக்கில் வரவு வைக்கப்படும் மேலும் முதுகலை முனைவர் பட்டம் பெறும் பொழுது யுஜிசி விதிமுறைகளின்படி குறிப்பிட்ட சதவீத கட்டண சலுகை இந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்படும் எனவே இந்த தேர்வினை ஒரு மாணவர் பெற்றுக் கொண்டாள் தன்னுடைய மேற்படிப்பு முழுவதையும் அதற்கான கல்வி செலவுகளையும் தன்னுடைய உழைப்பினால் பெற்று மகிழ்வுடன் கல்வியைத் தொடர்வதற்கு இந்த தேர்வானது வழிகாட்டுகிறது மேலும் இதுபோன்ற போட்டித் தேர்வுகளை மாணவர்கள் எழுதும் பொழுது அவளுடைய சிந்திக்கும் ஆற்றல் வளர்க்கப்பட்டு வருங்காலத்தில் மிகப்பெரிய சவால்கள் நிறைந்த வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை மிக எளிதில் வெற்றி பெற்று ஜொலிக்க முடிகிறது எனவே இந்தத் தேர்வுகளை குறித்து தெளிவுகளையும் விளக்கங்களையும் பெற்றோர்கள் அறிந்து கொண்டு தங்கள் பிள்ளைகளுக்கு சரியான வகுப்பிலிருந்து பயிற்சியைத் தொடங்கினார் திட்டமிட்ட பயிற்சியானது வெற்றியை பெற்றுத்தரும் ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்கள் இந்த தேர்வுக்கு பயிற்சி பெறும் எண்ணம் ஆசிரியர்கள் வழி காட்டுவது மிகவும் அவசியமாகும் வலியுடன் கூடிய தொடர் பயிற்சியானது ஆர்வத்துடன் கூடிய தொடர் கற்றலும் இந்த தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு அனைவருக்கும் அவசியமானதாகும் மொத்தத்தில் அனைத்து மாணவர்களும் இந்த தேர்வுகளில் சிறப்பாக பங்கெடுத்து வெற்றி வாகை சூடிட வாழ்த்துகிறேன் 
அன்புடன்
 கணேஷ் அன்பு 
கற்கண்டு கணிதம்
 திருவாரூர் மாவட்டம்

Comments


Click Here to join our whatsapp group

Join our Telegram channel

Popular posts from this blog