தமிழகத்தில் முதல் முறையாக அரசு உயர்நிலைப் பள்ளியில் வரலாற்று ஆய்விருக்கைதமிழகத்தில் முதல்முறையாக அரசு உயர்நிலைப் பள்ளியில் வரலாற்று ஆய்விருக்கை அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஆய்வு இருக்கைகள் பல்கலைக்கழகங்களில் மட்டுமே அமைக்கப்படும். ஆய்வு இருக்கை என்பது பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியரின்கீழ் 10 மாணவர்கள் ஒரு தலைப்பை ஆய்வு செய்து கட்டுரைகள் சமர்ப்பிப்பது ஆகும். உதாரணமாக, தமிழகத்தின் பல்கலைக்கழகங்களில் பாரதியார் ஆய்வு இருக்கை, பாரதிதாசன் ஆய்வு இருக்கை போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்த இப்படிப்பட்ட ஆய்வு இருக்கைகள் அமைக்கப்படுகின்றன. இந்நிலையில், தமிழகத்திலேயே முதல்முறையாக, திருவாரூர் மாவட்டம் தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில், கரிகாலன் பெயரில் வரலாற்று ஆய்விருக்கை தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பள்ளியின் வரலாற்றுத் துறை ஆசிரியரும், ஆய்விருக்கை வழிகாட்டியுமான ஆதலையூர் சூரியகுமார் கூறியதாவது: எங்கள் பள்ளி மாணவர்களுக்கு ஆய்வுத் திறனை ஏற்படுத்துவதற்காக தற்போது கரிகாலன் வரலாற்று ஆய்வு இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. கரிகாலன் பற்றிய ஆய்வுகளை எங்கள் ...