Skip to main content

Total Pageviews

Follow the Zeal Study channel on WhatsApp:

Follow the Zeal Study channel on WhatsApp:
Click the image to join our channel

Class8|வகுப்பு8|கணிதம்|இணைப்பாடப்பயிற்சி |Br course | எண்ணியல்-தசம எண்களின்கூட்டல்|நாள்3&4|KalviTv KalviTv videos Telecasted on 26/04/2021

பிரிட்ஜ் கோர்ஸ் பாடங்கள் இன்று முதல் ஒளிபரப்பு*இரண்டு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 'பிரிட்ஜ் கோர்ஸ்' பாடங்கள், இன்று முதல், கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகின்றன.
கொரோனா தொற்று காரணமாக, இக்கல்வியாண்டு முழுக்க, எட்டாம் வகுப்பு வரையிலான, மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை. ஒன்பதாம் வகுப்பு மாணவர்களும், சொற்ப நாட்களே பள்ளிக்கு வந்தனர்.இவர்கள், அடுத்த கல்வியாண்டில் செல்லும் முன், பாடத்திட்டங்கள் குறித்த அடிப்படை அறிவு பெறும் வகையில், மாநில கல்வியியல் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், பயிற்சி புத்தகம் மாணவர்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.




இப்புத்தகத்தில் உள்ள கருத்துகள், மாணவர்களுக்கு விளக்கும் வகையில், இன்று முதல் (ஏப்., 22ம் தேதி) மே 10 வரை, கல்வி தொலைக்காட்சியில், வகுப்பு வாரியாக பாடங்கள் ஒளிபரப்பப் படுகின்றன. இதற்கான அட்டவணை, கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.இதில், காலை 8:00 மணி முதல் மாலை, 4:30 மணி வரை, ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கு ஒருமுறையும், ஒன்றாம் வகுப்பு தவிர, மற்ற வகுப்புகளுக்கு, பாடங்கள் எடுக்கப்படுகின்றன.






இதன்படி, இன்று காலை 8:00 மணிக்கு, ஒன்பதாம் வகுப்புக்கான தமிழ் பாடத்துடன், வகுப்புகள் துவங்குகின்றன. இதை மாணவர்களுக்கு தெரிவித்து, பாடங்கள் கவனிக்க அறிவுறுத்துமாறு, பள்ளிகளுக்கு இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

Comments

  1. அரசு ஏற்படுத்திய கல்வி முறைக்கு மிக்க நன்றியுடையவர்களாக இருக்கிறோம்.
    சொல்லித்தரும் முறை மிக நன்றாக இருக்கிறது. தமிழ் வழியாக பாடக் கல்வியை கொண்டு படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு இது மிகச் சிறந்த பொக்கிஷம் ஆங்கில வழி கல்வியை பாடமாக கொண்டு பயிலும் மாணவர்களுக்கு தாங்கள் சொல்லித் தரும் சொற்கள் புரிந்து கொள்ள முடியவில்லை என்கிறார்கள் கேள்வித்தாள் ஆங்கிலத்தில் இருக்கும் சொல்லித்தருவது தமிழில் இருக்கிறபடியால் இதற்கு என்ன பதில் தரவேண்டும் என்பது அவர்களுக்கு குழப்பமாக இருக்கும். ஆகவே தயவு கூர்ந்து ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் கற்றுக் கொடுத்தால் மிக பயனுள்ளதாக இருக்கும். அதற்கான ஏற்பாடுகளை தமிழகஅரசு செய்தால் மிகவும் நன்றாக இருக்கும் நம்முடைய இந்த திமுகஅரசு மிக சிறப்பாக செயல்படுவதை யாவரும் அறிவர். ஆகவே இந்த பதிவையும் கருத்தில் கொண்டு வரும் நாட்களில் செயலாற்றினால் எல்லா ஆங்கில வழி பயிலும் மாணவர்களும் பயன் அடைவார்கள் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
    நன்றி

    ReplyDelete

Post a Comment

FOLLOW US ON GOOGLE NEWS BY CLICKING THE IMAGE

Popular posts from this blog