Class8| வகுப்பு 8| அறிவியல் | இணைப்புப் பாடப்பகுதி|Bridge Course | அளவீட்டியல் | நாள் 1&2| KalviTv ,KalviTv videos Telecasted on 26/04/2021
பிரிட்ஜ் கோர்ஸ் பாடங்கள் இன்று முதல் ஒளிபரப்பு*இரண்டு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 'பிரிட்ஜ் கோர்ஸ்' பாடங்கள், இன்று முதல், கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகின்றன.
கொரோனா தொற்று காரணமாக, இக்கல்வியாண்டு முழுக்க, எட்டாம் வகுப்பு வரையிலான, மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை. ஒன்பதாம் வகுப்பு மாணவர்களும், சொற்ப நாட்களே பள்ளிக்கு வந்தனர்.இவர்கள், அடுத்த கல்வியாண்டில் செல்லும் முன், பாடத்திட்டங்கள் குறித்த அடிப்படை அறிவு பெறும் வகையில், மாநில கல்வியியல் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், பயிற்சி புத்தகம் மாணவர்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இப்புத்தகத்தில் உள்ள கருத்துகள், மாணவர்களுக்கு விளக்கும் வகையில், இன்று முதல் (ஏப்., 22ம் தேதி) மே 10 வரை, கல்வி தொலைக்காட்சியில், வகுப்பு வாரியாக பாடங்கள் ஒளிபரப்பப் படுகின்றன. இதற்கான அட்டவணை, கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.இதில், காலை 8:00 மணி முதல் மாலை, 4:30 மணி வரை, ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கு ஒருமுறையும், ஒன்றாம் வகுப்பு தவிர, மற்ற வகுப்புகளுக்கு, பாடங்கள் எடுக்கப்படுகின்றன.
இதன்படி, இன்று காலை 8:00 மணிக்கு, ஒன்பதாம் வகுப்புக்கான தமிழ் பாடத்துடன், வகுப்புகள் துவங்குகின்றன. இதை மாணவர்களுக்கு தெரிவித்து, பாடங்கள் கவனிக்க அறிவுறுத்துமாறு, பள்ளிகளுக்கு இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
Pls upload live classes for 8th standard
ReplyDelete