10,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் இன்று முதல் 16 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் கொடுக்கப்பட்ட கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் தட்கல் முறையில் கூடுதல் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழக தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது
10,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அண்மையில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் 10,11, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் எழுதும் தனித்தேர்வர்கள் எப்போது விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் தற்போது அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராகி வரும் தனித்தேர்வர்கள் இன்று (மார்ச். 9) முதல் விண்ணப்பிக்கலாம்.
இதற்காக அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையதளம் வாயிலாக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விடுமுறை நாளான ஞாயிற்று கிழமையை தவிர்த்து 16 ஆம் தேதி வரை தனித்தேர்வர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
கடைசி தேதியான 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள் மார்ச் 18 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை தட்கல் முறையில் கூடுதல் கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
தட்கல் முறையில் விண்ணப்பிக்க 10 ஆம் வகுப்புக்கு ரூ.500, 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு ரூ.1,000 தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக செலுத்த வேண்டும்.
இதை அடுத்து 10,11, 12ஆம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க இருக்கும் தனித்தேர்வர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள தேதிகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment