நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.! வரும் 20-ம் தேதி இவர்கள் மட்டும் பள்ளி வர வேண்டும்.!நாளை அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை, 20-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என பள்ளிகல்வித்துறை உத்தரவு.
அரசுப் பள்ளி முன்னேற்றத்திற்காகவும் பள்ளிச் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகவும் குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் , 2009 ன்படி ஏற்படுத்தப்பட்ட குழுவே பள்ளி மேலாண்மைக் குழுவாகும் . அரசு வழிகாட்டுதலின் அடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் , பள்ளி மேலாண்மைக்குழு பள்ளியின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. பள்ளி மேலாண்மைக் குழுவினை இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை மறுகட்டமைப்பு செய்வது அவசியமாகும்.
அனைத்து அரசுப்பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களிடையே பள்ளி மேலாண்மைக்குழு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுதுவதற்காக 20.03.2022 ஞாயிற்றுக் கிழமையன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் அனைத்து பெற்றோர் கூட்டம் அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் நடத்தப்படவேண்டும். பள்ளி பெற்றோர்களின் பங்கு மற்றும் அடுத்து நடைபெறவுள்ள மேலாண்மைக்குழு (உறுப்பினர்களின் தேர்வு ) மறு கட்டமைப்பு நிகழ்வில் பெற்றோர்கள் கலந்துக்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் ஆகியவற்றை விளக்கமாக எளிய முறையில் தலைமை ஆசிரியர்கள் எடுத்துரைக்க வேண்டும் . தலைமையாசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் ஞாயிற்றுக் கிழமை பள்ளிக்கு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பள்ளி மேலாண்மைக்குழு சார்ந்த கூட்டம் மட்டுமே அன்று நடைபெற வேண்டும். அன்றைய தினம் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டிய அவசியமில்லை. தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையும் பள்ளிக்கு வரவேண்டிய சூழல் உள்ளதால் 19.03.2022 சனிக்கிழமையன்று தொடக்க நிலை முதல் மேல்நிலை வரை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் அனைத்து விடுமுறை அளிக்கப்படுகிறது முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
Comments
Post a Comment