மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 % ஒதுக்க உச்சநீதிமன்றம் அனுமதி
தமிழகத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடங்களை ஒதுக்க உச்சநீதிமன்றத்தால் இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடங்களை ஒதுக்க அரசாணை வெளியிட்டிருந்தது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தமிழக அரசின் அரசாணை செல்லும் என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் உத்தரவு அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது என அறிவிக்க கேரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், உத்தரவு செல்லும் எனக்கூறியதுடன் கவுன்சிலிங் நடத்தவும் அனுமதி வழங்கி உள்ளது. மேலும், 50 சதவீத இட ஒதுக்கீடுக்கு எதிரான பிரதான வழக்கு விடுமுறைக்கு பின்னர் விசாரிக்கப்படும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment