மதுரையைச் சேர்ந்த பள்ளி மாணவியர் சிலர், கூகுள் நிறுவன ஆதரவோடு தொழில்நுட்ப பயிற்சி பெற்று பயனுள்ள செயலிகளை உருவாக்கி அசத்தியுள்ளனர்.
மதுரையில் டெக்னோவிஷன் தொழில்நுட்ப நிறுவனத்தின் செந்தில்குமார் முயற்சியால் மதுரை மாணவியர் சிலர் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர்
செந்தில்குமார் கூறுகையில், 'இன்று தகவல் தொழில்நுட்ப துறையில் பெண்களின் பங்கு மிகவும் குறைவு. சிறுவயதிலேயே தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளித்தால் எதிர்காலத்தில் சாதனையாளர்களாக மாறுவார்கள் என்ற நோக்கத்தோடு மாணவியர் சிலரை தேர்ந்தெடுத்து கூகுள் நிறுவனத்துடன் இணைந்து பயிற்சி அளித்து வருகிறோம்.
அப்படி மாணவியர் 2018 ல் உருவாக்கியதுதான் 'மதுரை காவலன்' செயலி. மண்டல அளவில் தொடர்ந்து 2வது முறையாக மதுரை மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர்' என்றார்.
பத்தாம் வகுப்பு மாணவி ஸ்விதா கூறியதாவது: நான் 7 ம் வகுப்பு படித்தபோது பயிற்சி பெற்றேன்.
சமூகபிரச்னைகளை அடிப்படையாக வைத்து செயலி உருவாக்க பயிற்சி கொடுத்தார்கள். நகைபறிப்பை தடுக்க ஒரு செயலியை உருவாக்க என் பெற்றோர் கூறினர்.
ஒரு நானோ சிப்பை நகையில் ஒட்டி அணிந்துக்கொண்டால், நகை திருடும்போதோ, பறிக்கும்போதோ ஒன்றரை கி.மீ., துாரத்திற்குள் எங்குள்ளது என கண்டுபிடித்துவிடலாம். திருடன் தப்பிக்க முடியாது.அந்த செயலியை உருவாக்கி உள்ளேன் என்றார்.
கல்லுாரி மாணவி நேகா கூறுகையில், 'நான் பள்ளியில் படித்தபோது பாரம்பரிய உணவு, நாட்டு மருத்துவம் குறித்த செயலியை உருவாக்கினேன்.
நமது பாரம்பரிய உணவுகள், அதன் சத்துக்கள், பக்க விளைவுகள் இல்லாத நாட்டு மருத்துவத்தின் பலன்கள் குறித்து அதில் 'அப்டேட்' செய்துள்ளேன்' என்றார்.
பத்தாம் வகுப்பு மாணவி நேத்ரா,
11ம் வகுப்பு மாணவி சிவஸ்ரீ கூறுகையில், 'கிளீன் வேர்ல்டு எனும் செயலியை உருவாக்கி உள்ளோம். இதன் மூலம் எங்கு குப்பை இருந்தாலும் அதை செயலியில் போட்டோ எடுத்து அனுப்பினால் உள்ளாட்சி அமைப்பால் அகற்றப்படும். எவை மக்கும், மக்காத குப்பை என அறியவும் முடியும்' என்றனர். மாணவியரை மாவட்ட எஸ்.பி., பாஸ்கரன் பாராட்டினார்.
Comments
Post a Comment