IIT, NIT, AIIMS, IISc உள்ளிட்ட புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் படிக்க விரும்பும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி செலவை முழுமையாக அரசே ஏற்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஹைலைட்ஸ்:
அரசு பள்ளி மாணவர்களின் உயர் கல்வி செலவை அரசே ஏற்கும்.
6 முதல் 12வது மாணவர்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை.
இனி உயர்கல்வி நிறுவனங்களின் அரசு பள்ளி மாணவர்கள் இலவசமாக படிக்கலாம்.
IIT, NIT, AIIMS மற்றும் IISc உள்ளிட்ட புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்த தமிழக அரசு நிதிநிலை அறிக்கை தாக்களின் போது ஒரு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, IIT, NIT, AIIMS, IISc உள்ளிட்ட புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் படிக்க விரும்பும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி செலவை முழுமையாக அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஏனெற்றால், IIT, NIT, AIIMS, IISc ஆகிய படிப்புகள் பொருளாதார ரீதியில் உயர்ந்தவர்களுக்கானதாக கருதப்படுகிறது. அரசு பண்ணியில் பயிலும் மாணவர்களுக்கு புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் பயில வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் பொருளாதார ரீதியில் அவர்கள் பின்தங்கியுள்ளதால் இவர்களின் கனவு வெறும் கனவாகமட்டுமே உள்ளது.
இந்நிலையில், தமிழக சட்டமன்றத்தில் 2022 - 2023 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. அதில், கல்வித்துறைக்கு என பல திட்டங்களும், சலுகைகளும் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், இல்லம் தேடி வரும் கல்வித் திட்டத்திற்காக சுமார் ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, அரசுப்பள்ளி மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர உதவும் வகையில் கல்வியில் பின்தங்கியுள்ள 10 மாவட்டங்களில் முன்மாதிரி பள்ளிகளை அரசு உருவாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் நிதியாண்டில், மேலும் 15 மாவட்டங்களில் இதுபோன்ற முன்மாதிரி பள்ளிகளை உருவாக்க ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அரசு அறிவித்துள்ளது.
இதை தொடர்ந்து அடுத்த ஐந்து ஆண்டுகளில் அனைத்து அரசு பள்ளிகளையும் நவீன மயமாக்கும் திட்டத்திற்காக 'பேராசிரியர் க.அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்' என்ற திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இந்த பணிக்காக வரும் நிதியாண்டில் ரூ.1300 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
IIT, NIT, AIIMS போன்ற புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் பயில விரும்பும் அரசுப்பள்ளி மாணவர்களின் இளநிலை படிப்புக்கான முழுச் செலவையும் மாநில அரசே ஏற்கும் எனவும் அதிரடி அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இந்த உதவியை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை சென்னை ஐஐடி பாராட்டியுள்ளது.
Comments
Post a Comment