பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறைக்கு பட்ஜெட்டில் ஜாக்பாட்! பள்ளிக் கல்வித் துறையில் இந்த ஆண்டு பல புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறைக்கு பட்ஜெட்டில் ஜாக்பாட்! பள்ளிக் கல்வித் துறையில் இந்த ஆண்டு பல புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழக பட்ஜெட்டில் இந்த ஆண்டு பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறைக்கும் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பள்ளிக் கல்வித் துறைக்கு 32,599.54 கோடி ரூபாயும், உயர்கல்வித் துறைக்கு 5369.09 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நடப்பாண்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு முறையே, 36,895.89 கோடி ரூபாயும், 5,668.89 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு, 4296.35 கோடி ரூபாயும், உயர்கல்வித்துறைக்கு 299.8 கோடி ரூபாயும் அதிகரித்துள்ளது. பள்ளிக் கல்வித் துறையில் இந்த ஆண்டு பல புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, ஏற்கனவே 10 மாவட்டங்களில் மாதிரி பள்ளிகள் இயங்கி வரும் நிலையில், நடப்பாண்டில் மேலும் 15 மாவட்டங்களில் மாதிரி பள்ளிகள் உருவாக்கப்படும் என்றும் , இதற்காக 125 கோடி ரூபாயும், அடுத்த 5 ஆண்டுகளில் 7,000 கோடி செலவில் அனைத்து வகை அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, 18,000 வகுப்பறைகள் கூடுதலாக கட்டுதல் உள்ளிட்ட திட்டங்கள், அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment