6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்க குஜராத் அரசு முடிவு செய்துள்ளது.
இந்துக்களின் புனித நூலாக கருதப்படும் பகவத் கீதையை 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் சேர்க்க குஜராத் அரசு முடிவெடுத்துள்ளது. இது குறித்து அம்மாநில அரசு சுற்றறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில்,
மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு உகந்த வகையில் இந்திய கலாச்சாரம் மற்றும் அறிவியலை அவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான பாடத் திட்டங்களில் கதைகள் மற்றும் பாராயணம் போன்ற வடிவங்களில் பகவத்கீதை அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு பகவத் கீதையின் முக்கியத்துவம் பற்றி கூறப்படும். பின்னர் ஸ்லோகங்கள் கதைகள் பாடல்கள் கட்டுரைகள் என பல வடிவங்களில் பகவத்கீதை அறிமுகப்படுத்தப்படும். மேலும் ஒளிவடிவில் பகவத்கீதை பாடத்திட்டம் பல வேண்டும் இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பிற்கு காங்கிரஸ் , ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வரவேற்பு அளித்துள்ளது குறிப்பிடதக்கது.
Comments
Post a Comment