தமிழகத்தில் கடந்த வருடம் நடத்தப்பட்ட பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அனுபவ சான்றிதழ் போன்ற பல சான்றிதழ்களை சமர்ப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாகப் கொரோனா பெருந்தொற்று காரணத்தால் ஆசிரியர் தேர்வு வாரியம் எவ்வித தேர்வுகளையும் நடத்தவில்லை. இதன் காரணமாக காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மேலும் ஊரடங்கு காரணமாக ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் பணி ஆணை வழங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் தற்போது இயல்பு நிலையை நோக்கி திரும்பி வரும் வேலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் காலிப்பணியிடங்கள் மற்றும் தேர்வு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது.
அந்த வகையில் தற்போது இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
அதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பல் நுட்ப கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
அதாவது விண்ணப்பதாரரின் கூடுதல் தகுதிகள் பணி அனுபவ சான்றிதழ், நன்னடத்தை சான்றிதழ் போன்ற பிற சான்றிதழ்களை ஆன்லைன் வாயிலாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பதாரர்கள் கூடுதல் கால அவகாசம் கேட்டு இருந்த நிலையில் மேற்சொன்ன ஆவணங்கள் பதிவேற்றம் செய்ய மார்ச் 25-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.
மேலும் விண்ணப்பித்தவர்களின் பிற கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதற்கான உரிய பதில் அளிக்கப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment